போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிப்பானை இம்ரானை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை
தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிப்பானை இம்ரான் என்ற முகமது நஜிம் முகமது இம்ரானை உடனடியாக கைது செய்யுமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் தவிசாளர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்ரான், தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வெளியான தகவல், கடலோர எல்லைப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
முகமது இம்ரான் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் நுழையப் போவதாக தமிழக காவல்துறைக்கு மத்திய உளவுத் துறையினர் முன்னதாகவே தகவல் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் கடலோர போலீஸ் பாதுகாப்பை மீறி அவர் எப்படி தமிழகத்திற்குள்
நுழைந்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
