மன்னாரில் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு(photos)
மன்னார்- இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் சிலாவத்துறை பகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து இன்றைய தினம் (13.04.2023) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதிக பெறுமதி வாய்ந்த மாத்திரைகள்
மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்துள்ளதாகவும் இவை 16 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த கடத்தல் பொருட்கள் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





