நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் முடங்கும் நிலையில் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், இதய நோய்க்கான மருந்துகளையும் வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மருந்து தட்டுப்பாடு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவதற்கு மயக்க மருந்துகளும் தட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முதலுதவிகளுக்கு தேவையான பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.