மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு! புலம்பெயர்ந்தவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய புலம்பெயர் மக்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடிய தமிழர் பேரவையினால் ஒரு தொகை மருந்துப்பொருட்கள் இன்று(12.04.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடை பவனி

கனடிய தமிழர் பேரவை கனடாவில் முன்னெடுத்த நடை பவனி மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் மூலம் இலங்கையில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்களை வழங்கவுள்ளது.
இதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாரியளவில் மருந்து தட்டுப்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழ் உள்ள புற்றுநோயாளர்கள் வைத்தியசாலையில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு காணப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை குறைப்பதற்கான உதவியை வழங்கமுன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கலாரஞ்சனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் துரைரெட்னம் துஸ்யந்தன் உட்பட வைத்தியர்கள்,வைத்தியின் பிரதிப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 நிமிடங்கள் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri