சாய்ந்தமருதில் இடம்பெற்ற போதைப்பொருள் எழுச்சி மாநாடு
'போதையற்ற மருதூர்' எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சர்வேதச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு என்பன சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
குறுந்திரைப்படம்
இந்நிகழ்வில் விஷேட அம்சமாக போதைப்பொருட்கள் எவ்வாறு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப் படுகின்றது, அவர்கள் எவ்வாறு இப்பழக்கத்திற்கு உள்ளாகுறார்கள் என்பதை உணர்த்தும் குறுந் திரைப்படத்தினை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் தயாரித்து வழங்கினார்.
நிகழ்வில் வளவாளர்களாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்-ஷய்க் எம்.எம்.எம்.சலீம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் உளவள வைத்தியர் யூ.எல்.சாறாப்தீன்ன், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாடுச் சபையின் வட கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.வி.எம் றசாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan
