போதைப்பொருளுடன் இலங்கை வந்த பாகிஸ்தான் கப்பல்: முற்றுகையிட்ட இலங்கை சுங்கத்துறை
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் சுமார் 65 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின், 16,193 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நீண்ட விசாரணையின் போது, கப்பலின் குளிர் கொள்கலன் பெட்டியொன்றில் இருந்தே இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
மேலும், இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த போதைப்பொருள் பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




