நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணம் - நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி விசேட அதிரடிப்படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விசாரணை
நாகர்கோவில் கிழக்கு பகுதியின் காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் இணைந்து அந்த பகுதியை முற்றுகையிட்டு தீவிர தேடுதல் நடத்திய அதிகாரிகளால், அங்கு மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சர்வதேச சந்தையில் அதிக பணப்பெறுமதியைக் கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த நிறை மற்றும் அதன் துல்லியமான சந்தைப் பெறுமதி என்பவற்றை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri