அச்சத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் : சுனில் வட்டகல தெரிவிப்பு
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அச்சமடைந்துள்ளதாக பிரதி பொது பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் காரணமாக போதைப்பொருள் வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் சிலர் தன்னார்வ அடிப்படையில் சரணடைய ஆயத்தமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஷ போதைப்பொருளை முற்று முழுதாக நாட்டிலிருந்து இல்லாதொழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் வெற்றிகரமாக கிரமமான அடிப்படையில் முன் எடுக்கப்பட்டு வருவதால் போதைப்பொருள் வர்த்தகர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam