அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்கள்: ரவிகரன் சுட்டிக்காட்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தெரிவித்துள்ளார்.
எனவே அதிகரித்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (28.02.2025) இடம்பெற்ற கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளீன் சிறிலங்கா
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“புதிய அரசானது கிளீன் சிறிலங்கா என்ற திட்டத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் எண்ணத்தை, செயலை நாமும் முற்றுமுழுதாக வரவேற்கின்றோம்.
இந்த நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது போதைப்பொருள் பாவனை தலைவிரித்து ஆடுகின்றது.
அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையாலும், போதைப்பொருள் ஊடுருவல்களாலும் நாடு முழுவதும் தள்ளாடுகின்றது.
எங்களுடைய வடக்குகிழக்கில் 2009ம் ஆண்டிற்கு முன்பு இவ்வாறான நிலமைகள் இருந்ததில்லை. அதுவும் வடக்கிலே மிகக்கட்டுப்படாக இருந்த போதைப்பொருள் பாவனைகள், தற்போது மிகவும் அதிகமாகி கிளீன் சிறிலங்கா என்ற செயற்பாட்டிற்கு எதிரான வகையில் உள்ளது.
போதைப்பொருள் பாவனை
நான் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவன், வன்னித்தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவன். வன்னியில் மிகமோசமாக, கசிப்பு, கஞ்சா, ஐஸ், ஹெரோயின் இன்னம் பல பெயர்களில் சட்டவிரோத போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றது.
முல்லைத்தீவில் படையினர் மிக அதிகமாக உள்ளதாக பல புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவற்றுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனையும் அளவிற்கதிகமாக அந்தப் பகுதிகளில் உலாவருகின்றது.
ஏன்? இதனை பொதுமக்கள் பாதுகாப்பினையும், நாட்டைத் தூய்மையாக்கும் பணியிலும் ஈடுபடும் பாதுகாப்புத்தரப்பினால் கட்டுப்படுத்தமுட்டியாமல் உள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |