சம்பூரில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் நடைபெற்றுள்ளது.
இந்தநிகழ்வானது இன்று(2) சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பி பேரணியாகச் சென்றனர்.
அத்தோடு போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், குடும்பப் பிரச்சினைகள்,தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் மாணவர்களால் செய்து காட்டப்பட்டது.
இவ் நாடகங்கள் பார்ப்போரை கண்களங்க வைக்கும் வகையில் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.
சம்பூர் பொலிஸார், சேனையூர் மத்திய கல்லூரி,கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியால பாடசாலை நிர்வாகத்தினரின் ஒத்துழைப்போடு போதை ஒழிப்பு வார விழிப்புணர்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
