மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனை : ஒரு வாரத்தில் 67 பேர் கைது
மட்டக்களப்பில் (Batticaloa) போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புபட்ட 67 பேர் கடந்த ஒரு வார காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள், இன்றைய தினம் (07.05.2024) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில், திருட்டுச் சம்பவங்கள், கசிப்பு விற்பனை, சட்ட விரோத சாராயம் விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலதிக விசாரணை
மேலும் கைதானவர்களில், ஏற்கனவே பிணை வழங்கப்பட்டவர்கள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam