நான்காயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
சுமார் நான்காயிரம் போதை மாத்திரைகளுடன் போதை மாத்திரை வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதுடைய நான்கு நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரையே இவ்வாறு பொலிசார் கைது செய்துள்ளனர்.
4 லட்சம் ரூபாய் பெறுமதி
காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது இப்போதை மாத்திரைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பத்ரபள்ளி வீதியில் உள்ள வீட்டில் வைத்தே குறித்த போதை மாத்திரைகளை சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரம் போதை பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன .
இது மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
 
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        