துபாயில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் வர்த்தகர் பொலிஸாரிடம் சிக்கினார்
துபாயில் தலைமறைவாகி மிகவும் இரகசிய வாழ்க்கை வாழ்ந்து வரும் "ரசல் அலோசியஸ் ஸ்மித்" என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் இரத்மலானை மற்றும் கல்கிஸ்சை பிரதேசங்களை மையமாக கொண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் குறித்து இதுவரை பாதுகாப்புத்துறையினருக்கோ, புலனாய்வுத்துறையினருக்கோ எதுவித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில், ரஸலின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் கொலைகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை எதிர்பாராதவிதமாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு
பிரான்ஸ் பொலிஸாரின் பிடியில் இரத்மலானை குடு அஞ்சு, , போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்கு முன்னர் உள்ள ரசல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி முல்லேரிய சல்மல் தோட்டப் பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்தி அங்கிருந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு ஓட முயன்ற சம்பவத்தின் பின்னரே ரஸல் பற்றிய தகவல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
முல்லேரியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது வெளிநாட்டு கார் ஒன்றின் வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் என்பவற்றைக் கைவிட்டுச் சென்றிருந்தார்.
அவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போதே போதைப்பொருள் வர்த்தகர் ரஸல் தொடர்பான விபரங்களும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வழக்கு
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஹாலிஎல 05 கனுவ பகுதியைச் சேர்ந்த நளின் சம்பத் பத்திரன என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, திட்டமிட்ட இரட்டைக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நளின் சம்பத், ஹாலிஎல நீதிமன்றத்தை எரித்து அழித்தமை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹாலிஎல நளின் சம்பத்தின் தகவல்களுக்கு அமைய கைது செய்யப்பட்ட இரத்மலானை வர்த்தகர் ஊடாக முல்லேரிய பொலிஸாரின் பிடியில் உள்ள சம்பத் மற்றும் கடற்படையில் இருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவருக்கு டுபாயில் தலைமறைவாகியுள்ள ரசல் இரண்டு துப்பாக்கிகளை அனுப்பி வைத்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு மேல்முறையீடு செய்து பிணையில் வெளிவந்துள்ள மெகசின் வீதியைச் சேர்ந்த டில்லாவையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலை செய்வதற்காகவே ரஸல் குறித்த துப்பாக்கிகளை அனுப்பி வைத்துள்ளார்.
இரண்டு துப்பாக்கிகளையும் கைமாற்றிய போது இரத்மலானை வர்த்தகரின் காரின் வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ்கள் தவறுதலாக சந்தேகநபர்களுக்கு சென்றுள்ளதாகவும், அதன் மூலமாக துபாயில் பதுங்கியிருக்கும் ரஸலின் தகவல் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொலிஸாரால் கைது
ஆனால் கடந்த 15ம் தேதி போதைப் பொருள் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு டில்லா செல்லாத காரணத்தால் அவர் கொலைத்திட்டத்தில் சிக்கிச் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டுள்ளார்.
திட்டத்தில் பிசகு ஏற்பட்ட பின்னர் கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.
பின்னர் மற்றைய துப்பாக்கியுடன் முல்லேரியாவிற்கு வந்த சம்பத் அங்கொட முதலாளியின் சிஷ்யனான அமிதவுடன் முச்சக்கர வண்டியில் கொள்ளையடிக்கச் சென்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் ரஸ்ஸலின் பண முகாமைத்துவம், முறைகேடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியமான உறுப்பினர் ரத்மலானை பகுதியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான வர்த்தகர் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |