போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: ஒரே நாளில் 734 பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று(14.5.2026) நடத்தப்பட்ட விசேட சோதனைகளின்போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு தழுவிய ரீதியில் ஒரே நாளில் 786 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் போதைப்பொருட்களுடன் 734 பேர் சிக்கினர்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 277 கிராம் ஹெரோயின், 451 கிராம் ஐஸ், 2 கிராம் கொக்கெய்ன், 3 கிலோகிராம் 316 கிராம் கஞ்சா, 2 ஆயிரத்து 127 கஞ்சாச் செடிகள், 2 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 8 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 747 போதை மாத்திரைகள், 466 கிராம் மதனமோதகம் மற்றும் 89 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் தேசிய திட்டத்தின் ஊடாக நாட்டின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முற்றாக முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
[H8A82WT
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam