போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்சியால் பாடசாலை மட்டத்தில் பெரும் நம்பிக்கை: சுகாதார சேவைகள் பணிப்பாளர் (Photo)
மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சிகள் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பல பாடசாலைகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதாரத் துறையினரும், கல்வி துறையினரும் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்
இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பாடசாலை சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் சிகிச்சைகளை நாடிவரும் ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய
அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
