வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு (Video)
வவுனியா - வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு அல் - இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று (04.11.2022) இடம்பெற்றது.
மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு
வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஆகியோரின் வழிகாட்டலின் இடம்பெற்றது.
க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்கள் பாடசாலை இடை விலகிய பின்னர் தொழில் வாய்ப்புக்களை பெற முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாடசாலை கல்வியின் பின் முன்னெடுக்கக் கூடிய கற்கைகள், வருமானம் ஈட்டும் தொழில் நுட்ப கற்கைகள் தொடர்பிலும், மாணவர்களின் எதிர்காலம் நோக்கிய வளமான வாழ்க்கை தொடர்பிலும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து
கொண்டனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
