போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது!
ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று (23.10.2022) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆளங்குளம் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை 5 பகுதியை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 9 கிராம் 880 மில்லிகிராம் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சான்று பொருட்களுடன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
