விருந்துபசாரம் ஒன்றில் இளைஞர்கள் செய்த மோசமான செயல்! பொலிஸார் தீவிர நடவடிக்கை
பெந்தோட்டை – போதிமலுவ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உல்லாச விடுதியில் சிலர் போதைப்பொருள் பாவனையுடன் விருந்துபசாரம் ஒன்றை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பலர் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வத்தளை, கொழும்பு – புதுக்கடை, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளி, வலஸ்முல்ல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் பலப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் முற்ப்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் விருந்துகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
