புனர்வாழ்வு மையத்திற்காக தரப்பட்ட காணியில் கட்டடம் அமைத்துத் தருமாறு கோரிக்கை
மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களின் புனர்வாழ்விற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட காணியில் கட்டடமொன்றை அமைத்து தர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (30.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
போதை பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்திலே மது, போதைப்பொருள் பாவனை என்பது மிகவும் அதிகரித்து கொண்டு வருகிறது. நாடளாவிய ரீதியிலே நாங்கள் புனர்வாழ்வு சேவையைச் செய்து அதிகமான வெற்றியையும் கண்டிருக்கிறோம்.
தற்போது நாங்கள் ஒரு வாடகை இடத்திலேயே இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். எங்களிடம் குணமடைந்தவர்கள் இலங்கையில் அத்தனை மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு அரசாங்கம் ஒரு ஏக்கர் காணியைத் தந்திருக்கிறார்கள்.

கட்டடம் தேவை
அதில் நான் கட்டடம் ஒன்றை அமைத்து இந்தச் சேவையை மேலும் திறம்படச் செய்ய எண்ணியுள்ளேன். எனினும் இப்போது நான் வாடகைக்கு இருக்கும் இடத்தை உரிமையாளர்களுக்கு அந்தக் கட்டடம் தேவைப்படுவதால் நாங்கள் இன்னும் ஒரு இடத்திற்கு நகர வேண்டிய தேவை உள்ளதால், இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து நாங்கள் செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
ஆகவே அரசாங்கத்தால் எங்களுக்குத் தரப்பட்ட அந்தக் காணியில் எங்களுக்கு புதியதொரு கட்டடத்தை அமைத்துத் தந்தால் இலகுவாக இருக்கும். இதனை ஜனாதிபதிக்கும் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15