போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: குருமுதல்வர் ஜெபரட்ணம் (Video)
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் ஆகிய தீய செயற்பாட்டில் இருந்து அனைவரும் விலக வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் நேற்று (23.10.2022) கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கும் பெரும் தீமையாகிய போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு எதிராக பாடுபடுபவர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
போதைப்பொருள் பாவனை
இதுவரை போதைப்பொருள் பாவனைக்கும் போதைப்பொருள் கடத்துவதற்கும் பலர் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வாறானவர்களிடம் நாங்கள் கோருவது என்னவெனில் இந்த தீய செயற்பாட்டில் இருந்து அனைவரும் விலக வேண்டும்.
பெற்றோர்களுக்கான அறிவிப்பு
இவ்வாறான தீய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாதுகாப்பு தரப்பினரும் சிவில் உத்தியோகத்தர்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு போதைப்பொருளால் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகளை பெற்றோர்கள் இனம் கண்டு உடனடியாக புனருத்தாரன இடங்களுக்கு அனுப்பி சிகிச்சைக்குரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
