நீரில் மூழ்கி காணாமல் போன நால்வர்: தேடும் பணிகள் தீவிரம் (VIDEO)
புதிய இணைப்பு
மன்னார் கோந்தை பிட்டி கடலில் காணாமல் போனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்றைய தினம் (12) மதியம் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என தெரிய வந்துள்ளது.
மேலும் அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன் (வயது-28) என்கின்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நேற்று மாத்திரம் நீரில் மூழ்கி நால்வர் காணாமல் போயுள்ளனர்.
மன்னாரில் இருவரும், கம்பஹா வத்தளையில் இருவரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 15வயதான சிறுவனும் உள்ளடங்குகிறார். மன்னாரில் ஏரிப்பகுதியில் படகில் பயணம் செய்த இருவர் படகு கவிழ்ந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளனர்
21 மற்றும் 27 வயதானவர்களே காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை வத்தளையில் திக்கோவிட்ட பகுதியில் நீராடச்சென்ற 15வயதான சிறுவன் ஒருவர் உட்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
