வரட்சியால் வற்றியுள்ள குளங்கள் - நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு
மட்டக்களப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25,000 லீற்றர் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவி வருகின்றமையினால், கிராமியக் குளங்கள் வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குடிநீர் வழங்கத் திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக் குளம், பொறுகாமம் குளம், வெல்லாவெளிக் குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள கிராமியக் குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், கால்நடைகளும் நீர் தேடிச் செல்வதோடு, வற்றிய குளங்களில் அந்தப் பகுதி மக்கள் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்வதையும், பறவைகள் இரைதேடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25,000 லீற்றர் குடிநீர் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.


