வைத்தியசாலைகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை உடன் கைவிட வேண்டும் என நாடாளுமன்றில் கோரிக்கை
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாகக் கைவிட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் (Keheliya Rambukwella) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் (Vino Noharathalingam) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அமைச்சரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைகளின் கீழிருந்த பல அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு மத்திய அரசால் பறிக்கப்படுகின்ற, மீளப் பெறப்படுகின்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாகாண சபைகளுக்கு இருக்கின்ற நிதி, பொலிஸ், காணி அதிகாரங்கள் அரசமைப்பில் எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளன.
நடைமுறையில் அவை எல்லாம் மாகாணசபைகளிடமிருந்து பிடுங்கப்பட்டு மரத்துக்குச் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல்தான் மாவட்ட வைத்தியசாலைகளும் கடந்த ஆண்டிலிருந்து மாகாண சபைகளிடமிருந்து பறிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக இந்த நாட்டிலுள்ள 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை மாகாணத்திலிருந்து பறித்தெடுத்து மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அதேபோல் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் என்ற இனிப்பு முலாம் பூசப்பட்டு பல பாடசாலைகளை மத்திய அரசு உள்வாங்கியதையும் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கிவிட்டுப் பின்னர் அவற்றை பறித்தெடுக்கின்ற செயற்பாட்டை அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்.
மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
