ரஷ்ய கடற்படையால் தடுக்கப்பட்டுள்ள ட்ரோன் தாக்குதல்
ரஷ்ய கடற்படை தென்கிழக்கு உக்ரேனிய நகரங்களின் கட்டுப்பாட்டிற்கு போர் மூளும் நிலையில், மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் தாயகமான செவாஸ்டோபோல் விரிகுடாவில் ஒரு ட்ரோன் தாக்குதலை தடுத்துவிட்டது என்று ரஷ்யாவால் நிறுவப்பட்ட ஆளுநரின் அறிக்கை தெரிவிக்கிறது.
செவாஸ்டோபோல் கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
மேலும் தெரிவிக்கையில்,“இன்று பல மணி நேரம், செவாஸ்டோபோலில் உள்ள பல்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்தன. அனைத்து ஆளில்லா வான்வழி வாகனங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவில், செவாஸ்டோபோல் விரிகுடாவின் நீரில் ஆளில்லா வான்வழி வாகனங்களும் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல்ட் மேற்பரப்பு வாகனங்கள் ஆகியவற்றின் மிகப் பெரிய தாக்குதல் மாஸ்கோ அதன் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.”என கூறியுள்ளார்.