புடின் மீதான கொலை முயற்சி! பின்னணியிலுள்ள நாடுகள் தொடர்பில் ரஷ்யாவின் தகவல்-செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்லும் நோக்கில் அனுப்பப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையை நோக்கி செலுத்தப்பட்ட குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா முறியடித்திருந்தது.
ஆரம்பத்தில் இந்த தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டதாக ரஷ்யா கூறியிருந்ததுடன், இதனை உக்ரைன் மற்றும் அமெரிக்கா மறுத்திருந்தது.
இதேவேளை, இருநாடுகளும் இந்த தாக்குதலை பொறுப்பேற்க மறுப்பது வேடிக்கையானது என ஜனாதிபதி புடினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,