மகிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் போலி தகவல்: ஆளும் கட்சி பதிலடி
அரச புலனாய்வுப் பிரிவின் கருத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது தாக்குதல் நடத்தப்படும் என வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல(Sunil Watagala) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு இன்று (26.12.2024) வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.
அவ்வாறு பிரச்சினைகள் குறித்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டால் பாதுகாப்பு நிலைமையினை கருதி தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானத் தாக்குதல்
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“மகிந்த ராஜபக்சவின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்ததாக மனோஜ் கமகே கூறியிருந்தார்.
இப்போது பொலிஸ் மா அதிபர் அவரை விசாரிக்கத் தயாராகிவிட்டார்.
மனோஜ் கமகே கூறும் விடயங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் வழிதவறும் செயற்பாட்டுக்கு கொண்டு செல்லும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |