அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி சேவைகள் முடக்கம் - உடனடியாக மாற்றப்படும் தரவு வலயங்கள்
உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்கள் நேரடியாக சேதமடைந்துள்ளதுடன், பஹ்ரைனில் அமைந்துள்ள ஒரு மையமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கி நடவடிக்கைகள் முடக்கம்
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வங்கி நடவடிக்கைகள், இணையத்தளங்கள் மற்றும் பல கைப்பேசி செயலிகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் பஹ்ரைன் தளத்திற்கு அருகில் விழுந்த ஒரு ட்ரோன் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மின்சார விநியோகம் தடைப்பட்டதால் தரவு செயலாக்க நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளது.
மேலும், தீயணைப்பு அமைப்புகள் இயங்கியதன் காரணமாக, தொழில்நுட்ப உபகரணங்களுக்கு நீரினால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகின்றது.
ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்
கட்டமைப்பு சேதம், மின் தடை மற்றும் தீ விபத்துகள் காரணமாக முழு செயல்பாடுகளையும் மீட்டெடுப்பதற்கு நேரம் எடுக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமது சேவைகளை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களையும் உடனடியாக தமது தரவுகளை ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற பாதுகாப்பான வலயங்களில் அமைந்துள்ள சேவையகங்களுக்கு மாற்றுமாறு அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா நாடுகளில் ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam