குறிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இடங்கள்! தெஹ்ரானில் ஜனாதிபதி அலுவலகமும் தரைமட்டம்
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஜனாதிபதி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது.
தாக்குதல்களின் எண்ணிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் 176 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை 504 இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், 153 நகரங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஐ எட்டியுள்ளது.
இதேவேளை, மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களை தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri