இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பொருட்களை அனுப்புவதில் சிக்கல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதில் சிக்கல் நிலவுவதாக தபால் மா அதிபர் ஜெனரல் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார கூறியுள்ளார்.
இன்று ( 03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பொருட்கள் இன்னும் அனுப்பப்படவில்லை.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது குறைவாக உள்ளது.
பொருட்களை அனுப்புவதில் இடையூறு
மேலும் சில பொருட்களை அனுப்புவதில் இடையூறுகள் இருக்கலாம்.சர்வதேச அஞ்சல் சேவைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அந்த பகுதிக்கான ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாமதங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த நாடுகளின் அஞ்சல் நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். சர்வதேச அஞ்சல் சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் பொருட்களை அனுப்பும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாமதம் ஏற்படுவதால் ஆபத்து
குறிப்பாக அழியக்கூடிய பொருட்களினால், தாமதம் ஏற்படுவதால் ஆபத்துகள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பொருட்களை அனுப்புவதில் உள்ள சிரமங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam