இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்காவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி தொடர்பில், இத்தாலியிலுள்ள இலங்கை தூதுவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பத்திரம்
இதன்மூலம் இத்தாலியில் ஓட்டுநர் உரிமங்களுக்கு பொறுப்பான நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam