வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.

இது தொடர்பாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம்
இதேவேளை இந்த நடைமுறை மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

எப்படியிருப்பினும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் நாடுகளில் வழங்கிய ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan