சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகள் பற்றாக்குறை காணப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் 08 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
அனுமதிப் பத்திர அட்டைகள்
அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு போதியளவிலான இயந்திரங்கள் இன்மையால் சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் பலமாதங்களாக அச்சிடப்படாது உள்ளன என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கான புதிய அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 20 கோடி ரூபா செலவிட வேண்டியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
இதனால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் ‘கார்ட்’களை அச்சிடும் இயந்திரங்களை பெற்று பத்திரமொன்று 150 ரூபாவை அறவீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் தனியார் துறையிடம் அச்சிடுவதற்கு வழங்கும் யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
