சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற தேவையான மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு
சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்காக புதிய டிஜிட்டல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறித்த முறைமையானது நாளை (24.09.2026) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்கான நேர ஒதுக்கீடு
புதிய முறைமையின் கீழ், விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் மூலமாகவும் தங்களது மருத்துவப் பரிசோதனைகளுக்கான நேர ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நேர ஒதுக்கீட்டுச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளதோடு, திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதற்காக விண்ணப்பதாரர்கள் எந்தவொரு மேலதிகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை இலகுபடுத்தவும், நேர ஒதுக்கீடுகளை மிகவும் இலகுவாகச் செய்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்