நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்குவது சிரமம்! சுட்டிக்காட்டும் சாரதிகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்குவது சிரமமாக இருப்பதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக நான்கு நகரங்களுக்கு இயங்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை நடத்துனர் இன்றி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேருந்துகளில் நடத்துனர்கள், பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்காமல் மோசடி செய்ததாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேருந்து நடத்துனர்கள்
அதன்படி, மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து முனையத்திலிருந்து ஆரம்பிக்கும் காலி, மாத்தறை எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை பேருந்துகள் நடத்துனர்கள் இன்றி சாரதியுடன் மாத்திரமே இயங்க ஆரம்பித்துள்ளன.
மாகும்புரா - பன்னோக்கு போக்குவரத்து மையத்தில், ஒரு நடத்துனர் பயணிகளிடம் பணம் வசூலித்து டிக்கெட்டுகளை வழங்குகிறார், அதன் பிறகு டிரைவர் மட்டுமே பேருந்தை எடுத்துச் செல்கிறார்.
குறித்த நடைமுறை செயற்பாட்டுக்கு வந்த பின்னர், ஏனைய நாட்களை விட இலங்கை போக்குவரத்துச் சபையின் ருஹுனு பேருந்து கம்பனியின் வருமானம் 10 இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், விரைவுப் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் இன்றி பயணிப்பது சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |