சாரதிகளின் இடமாற்ற கோரிக்கை நியாயமானது : சுகாஷ் தெரிவிப்பு
தாபன விதிக்கோவையின் பிரகாரம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அரச சாரதிகள் இடமாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அரச சாரதிகள் தமது இடமாற்றத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
வழங்கிய உத்தரவாதம்
இந்நிலையில் குறித்த போராட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்த மாதம் முதலாம் திகதி இடமாற்றம் வழங்கப்படுமென்று ஆளுநர் அலுவலகம் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் உடனடியாக இடமாற்றப் பணிகளை ஆரம்பிக்குமாறு கோருகின்றோம்.
சட்டத்தின் பிரகாரம் நீதிக்காகப் போராடும் வட மாகாண அரச சாரதிகளுக்கு எமது பரிபூரண ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
