கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தை இடைநடுவில் விட்டுச்சென்ற ஓட்டுநர் : கடும் சிரமத்தில் பயணிகள்
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து எண் 50இன் ஓட்டுநர் திடீரென இடை நடுவே தப்பி ஓடியதால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முனதினம் மதியம் கொக்கல தொடருந்து நிலையத்தில் தொடருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இவ்வாறு சென்றுள்ளார்.
தொடருந்து கொக்கல புகையிரத நிலையத்தை அடைந்ததும், ஓட்டுநர் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தலைமை ஓட்டுநர் அதிகாரிக்கு தெரிவித்து, கொக்கல தொடருந்து நிலையத்தில் தொடருந்தை நிறுத்திவிட்டு சென்றார்.
சிரமத்தில் பயணிகள்
அதன் பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. சில மணி நேரம் கழித்து வந்த கொக்கல நிலைய அதிகாரி தொடருந்தில் இருந்த பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படும் தொடருந்து துணைப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
