கொழும்பில் இருந்து மதுபோதையில் தொடருந்தினை செலுத்திய சாரதியினால் பரபரப்பு
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி இன்று (30) பயணத்தை ஆரம்பித்த தொடருந்தின் சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு அமைதியற்ற வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சாரதி, கண்டி நகருக்கு அருகில் சுதுஹும்பொல என்ற இடத்தில் தொடருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய போது பயணிகள் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
இந்நிலையில் உதவி சாரதி மூலம் கண்டி தொடருந்து நிலையம் நோக்கிதொடருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புப்பிரிவினரிடம் சாரதியை ஒப்படைக்க நடவடிக்கை
இதனையடுத்து மதுபோதையில் இருந்த தொடருந்து சாரதியை தொடருந்து பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடைய வேண்டும் என்ற நிலையில், மதியம் 2.30 மணிக்கு தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
