சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மக்களிடம் கையளிப்பு! (Photos)
இலங்கை கடற்படையின் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பங்களிப்புடன் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் இன்று (22) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், குடிதண்ணீர் திட்டத்தின் பெயர் பலகையினை கடற்படை அதிகாரியும், கட்டத்தினை புதுக்குடியிருப்பு பதில் பிரதேச செயலளரும் திறந்து வைக்க குடி தண்ணீர் இயந்திரத்தினை இராணுவ அதிகாரி ஆழியினை அழுத்தி தொடக்கி வைத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குடிதண்ணீர் பிரச்சினையினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இப் பிரதேசத்தில் அதிகளவான சிறுநீரக நோயாளர்களும் காணப்படுகின்றார்கள்.
இந்நிலையில் வள்ளிபுனம் கிராமத்தில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்ட இக் குடிநீர் திட்டம் ஊடாக கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளதுடன் கிராம மக்கள் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச உதவி செயலாளர், இராணுவ அதிகாரி, கடற்படை அதிகாரி, கிராமசேவையாளர், வள்ளிபுனம் பாடசாலை அதிபர், சமூக மட்ட அமைப்புக்களின்பிரதிநிதிகள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.





