மீன்பிடி படகு விபத்து:பல நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள்
சாமி மல்லி எனும் மீன்பிடி படகில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
ஐந்து நாட்களுக்கு முதல் ஆறு கடற்தொழிலாளர்கள் மீன் பிடிப்பதற்காக சென்ற போது குறித்த படகு ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு பின்னர் தற்போது அந்த படகு மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து மூன்று கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று கடற்தொழிலாளர்கள் மீட்பு
குறித்த படகில் பயணித்த மற்ற மூன்று கடற்தொழிலாளர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில்,மற்றுமொரு மீன்பிடி படகால் இந்த படகு மீட்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து மீடகப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் ஹபராதுப பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
