உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: 2 மாத கால வரம்பு - பிறப்பிக்கப்பட்டது உத்தரவு
உக்ரைன் இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, போர்முனையில் பணியாற்றும் வீரர்களுக்குக் கட்டாய இரண்டு மாத கால அவகாச வரம்பை நிர்ணயித்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஒரு வீரர் போர்க்களத்தின் முன்வரிசையில் அதிகபட்சமாக 2 மாதங்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார். 2 மாதங்கள் முடிந்தவுடன், அந்த வீரரைக் கட்டாயமாகப் போர்க்களத்திலிருந்து பின்வரிசைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இந்த இடமாற்றம் (Rotation) ஒரு மாதத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரைனிய இராணுவத்தில் நிலவி வரும் ஆள் பற்றாக்குறை மற்றும் வீரர்களின் மனச்சோர்வைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்வரிசையில் பணியாற்றும் வீரர்கள்
இந்த உத்தரவின்படி, முன்வரிசையில் (Frontline) பணியாற்றும் வீரர்கள் அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே பணியில் இருக்க முடியும்; அதைத் தொடர்ந்து ஒரு மாத கால கட்டாயப் பணி சுழற்சி (Rotation) அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் வீரர்கள் போர்க்களத்திலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான ஓய்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்படுவதை இராணுவத் தளபதிகள் உறுதிசெய்ய வேண்டும்.
ட்ரோன் தாக்குதல்களின் ஆதிக்கம் காரணமாகப் போர்க்களம் ஒரு 'கொலை மண்டலமாக' மாறியுள்ளதாகவும், இது வீரர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு தளவாட விநியோகத்திலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சிர்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி அறிவிப்பு
வீரர்களின் உயிரைப் பாதுகாப்பதும், இராணுவத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதுமே இந்தத் தற்கால சுழற்சி முறையின் முக்கிய நோக்கம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். போதிய ஓய்வின்றிப் பல மாதங்களாகப் பணியாற்றும் வீரர்களின் அவலநிலை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
மேலும், இந்தப் புதிய உத்தரவில் வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் வெடிமருந்துகளைச் சரியான நேரத்தில் வழங்குவதும், அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இராணுவச் சேவைக்கான ஆர்வம் குறைந்து வரும் சூழலில், வீரர்களின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் புதிய ஆட்களைப் பணியில் சேர்க்க முடியும் என இராணுவத் தலைமை நம்புகிறது.
அதே நேரத்தில், ரஷ்யா மெதுவாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், இந்த சுழற்சி முறை இராணுவத்தின் தற்காப்புத் திறனைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் உக்ரைனுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan