வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளில் வடிகான் அமைப்பு பணி முன்னெடுப்பு
கிளீன் சிறிலங்கா திட்டத்தின் ஊடாக வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளில் வடிகான் அமைப்பு பணிகளும் அழகுப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நொச்சிமுனை கிராமத்தில் கடந்த கால வெள்ளப்பெருக்கு காரணமாக இருந்த வடிகான் அமைப்பு குறைபாடுகளை அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதிக்கான கள விஜயம் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் மேற்கொண்டு இருந்தார்.
இதன்போது நீண்ட காலமாக அப்பகுதியில் வடிகான்கள் சேதமடைந்திருந்ததனால் நொச்சி முனை. அனுமார் கோயில் வீதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களின் குறைபாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.
அழகுப்படுத்தும் பணி
எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால் இப்பகுதியில் வடிகான்கள் மற்றும் அழகுப்படுத்தும் பணிகளும் நன்னீர் மீன் மீன்பிடியாளர்களுக்கு வேண்டிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.






