அரசமைப்பு வரைபு இம்மாத இறுதியில் நீதி அமைச்சரிடம் கையளிக்க ஏற்பாடு
புதிய அரசமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில் அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழு 6 மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்தக் குழு அதன் முதல் அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் அரசிடம் கையளிக்கவுள்ளது.
அரசமைப்புக்கான வரைபைத் தயாரிக்கும் குழு கடந்த ஆறு மாதங்களில் அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மேற்படி அனைத்துத் தரப்பினர்களதும் கருத்துக்களை உள்வாங்கி, தயாரிக்கப்பட்டு வரும் ஆரம்ப வரைபு நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழுவின் பதவிக் காலமும் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரைபை நீதி அமைச்சர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியுடன் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri