நவீன தொழிநுட்பத்துக்கான விருதை பெற்ற வைத்திய கலாநிதி பரம்சோதி
மிகச்சிறந்த பாதுகாப்பு துறை விஞ்ஞானியாக வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார், அமெரிக்காவில் விருது பெற்றுள்ளார்.
வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார் ஆறு ஆண்டுகளாக டார்டெக் (TARDEC) உடன் இணைந்து கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் (California Institute of Technology) பணியாற்றியுள்ளார்.
அதில், தன்னியக்க ஒன் ரோட்(on road) மற்றும் ஓப் ரோட் (off road) தரை வாகனத் தயாரிப்பு தொடர்பில் ஆய்வு செய்வதில் தனது நேரத்தை செலவளித்துள்ளார்.
பலரிடமிருந்து கிடைத்த பங்களிப்புகள்
அத்துடன், வைத்திய கலாநிதி ஜெயக்குமார், தன்னியக்க மற்றும் நவீன தொழிநுட்ப திறன் வாய்ந்த வாகனங்களை தயாரித்து வெளியிடுவதில் தீவிரம் காட்டும் வருகின்றார்.
அவர், 125 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வெளியீடுகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளதுடன், ஏராளமான விருதுகளையும் தன்னியக்க பொறியியலாளர்களுடன் இணைந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விருது பெற்றமை குறித்து வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார் தெரிவித்ததாவது,
விருது கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது வெற்றிக்கு நண்பர்கள், ஒத்துழைப்பாளர்கள், வழிகாட்டிகள், தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரிடமிருந்து கிடைத்த பங்களிப்புகள் மற்றும் ஆதரவுதான் காரணம் எனத் தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
