ஐஎம்எப் உடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை என்கிறார் நலிந்த ஜெயதிஸ்ஸ
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் டயஸ்போராக்கள் குறித்த அமெரிக்காவின் எதிர்பார்ப்பு: விசா மறுப்புக்கான காரணத்தை போட்டுடைக்கும் சரத் வீரசேகர
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஐஎம்எப் உடன் கொடுக்கல் வாங்கல்
மேலும் தெரிவிக்கையில், மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஆணைக்கு உட்பட்ட வகையிலான யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சர்வதேச நாணய நிதிய யோசனைகளுக்குள் மறைந்து கொண்டு பொருளாதார பிரச்சினைகளை மேலும் காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்கிறது என கூறியுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் உரிய நேரத்தில் உதவி பெற்றுக் கொள்ள தவறியதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயல்பட நேரிட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
