முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர்!
சென்னையில் நேற்று (10.05.2026) நடைபெற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில், இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கீதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி கலந்துகொண்டுள்ளனர்.
நீண்ட உறவு..
இதன்போது, இலங்கை மக்களின் சார்பில், புதிய முதலமைச்சரின் பதவிக்காலம் வெற்றிகரமாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாகவும் அமைய மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் விஜய்யின் தலைமைத்துவத்தின் கீழ், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமை புதிய உச்சங்களை எட்ட வேண்டும் என வாழ்த்திய பிரதி உயர்ஸ்தானிகர், அவரது பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமையவும் தனது நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால நட்புறவின் ஒரு பகுதியாக, இத்தருணம் இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! மனைவியை நாடுகடத்த இராஜதந்திர உதவி - பலரிடம் வாக்குமூலம் பதிவு


