மக்களுக்கு பெற்றுக் கொடுத்த ஒவ்வொன்றையும் எனது கடமையாகவே கருதுகின்றேன்: டக்ளஸ்
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக் கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக் கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாக கூட்டத்தில் இன்று(18.3.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம் போராளிகளில் ஒருவனாக இருந்தவன்.
மாகாணசபை முறைமை
போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது.
போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமைக்கு ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன்.

வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன்.ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம்.
ஆனால் அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என்று அவர ் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam