டக்ளஸ் பெருந்தொகை மின்சாரக் கட்டண நிலுவையை செலுத்த தவறியதாக குற்றச்சாட்டு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருந்தொகை மின்சாரக் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்றில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீன்பிடித்துறை அமைச்சரான டகள்ஸ் தேவானந்தா சுமார் ஒரு கோடி ரூபா மின்சார கட்டண நிலுவைச் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு பாரிய தொகை நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறிய போதிலும் மின்சார இணைப்பு இன்னும் துண்டிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் ஸ்டேன்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தின் மின்சாரக் கட்டணமே இவ்வாறு நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெருந்தொகை கட்டண நிலுவைச் செலுத்தவில்லை என்ற தகவலை அம்பலப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது போன்றே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மின்சாரக் கட்டண
நிலுவையைச் செலுத்தாமை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த உள்ளதாக ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri