சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பார்வையாளர்களை சந்திப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டக்ளஸ் தேவானந்தா
நேற்று மதியம் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, சிறைச்சாலை வைத்தியர் பரிசோதித்து, பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையின் அறையில் அனுமதிக்கப்பட்டார்.

அரசாங்கத்தால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி, பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் கைகளில் சிக்கியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மாநகரசபையின் பட்ஜெட்டை எதிர்க்க தலைக்கு 150 லட்சமா! என்பிபியிடம் கொடுக்கல் வாங்கல் டீல் இல்லை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |