வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகம்: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால், வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
பல நோக்கு கூட்டுறவு சங்கம்
இதுதொடர்பாக, துறைசார் அமைச்சருடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய நிலையில், மேலதிகமாக 100 மெற்றிக்தொன் சீனியை அனுப்புதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள சீனியை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற 48 பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாகவும் நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
