மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை வலுவூட்டுவதற்கான முயற்சிகள் ஏற்படுத்தி தரப்படும்: டக்ளஸ் உறுதி
யாழ். கரவெட்டி பிரதேச மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை வலுவூட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
புதுவருட தினத்தை முன்னிட்டு கரவெட்டி தெற்கு திருவள்ளுவர் விளையாட்டுக்
கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த மழலைகள் கல்விப்பூங்காவின்
விளையாட்டு நிகழ்வுகள் இன்று (14.04.2024) பிற்பகல் திருவள்ளுவர்
விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வாழ்வாதாரம் மற்றும் தொழில் முயற்சிகள்
அவர் மேலும் தெரித்ததாவது,
"வாழ்வாதாரம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கான பொருளாதார ரீதியான தேவைப்பாடுகளுடன் இப்பகுதி மக்கள் வாழ்ந்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
அதனடிப்படையில் பிரதேச மக்களதும் குறிப்பாக விளையாட்டுத்துறைசார் இளைஞர்களது தேவைப்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறை சார்ந்த பொறிமுறையை உருவாக்கி என்னிடம் முன்வைத்தால் அதை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து வழங்களையும், ஏற்பாடுகளையும் மேற்கொண்டு தர தான் தயாராக உள்ளோம்.
மேலும் இப்பிரதேச இளைஞர்கள் தமது விளையாட்டுத் துறைசார் திறமைகளை மேம்படுத்தும் வகையில் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பயிற்சிகளை முன்னெடுக்கும் வகையில் மின்னொளி வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளனர்.
அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் கொள்வனவு தொடர்பிலும் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று விளையாட்டுக் கழகத்தின் பொருளாதார ஈட்டலுக்கான ஏற்பாடாக சூரிய ஒளி மின்கலங்களை பொருத்தும் திட்டத்தை பொருத்துவதற்கும், சுத்தமான குடிநீர் பெறுவதற்கு இயந்திரம் வழங்குவதற்கும் பரிசீலனை செய்யப்படும். அதற்கான திட்டவரைபை விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் தயாரித்து தர வேண்டும்.
குறித்த பிரதேசத்தில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பத்தினரது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார அசௌகரியங்களுக்கு தீர்வைக்காணும் வகையில் வாழ்வாதார சுயதொழிலுக்கான ஏற்பாட்டை செய்ய நடவடிக்கை மேற்கொள்ப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |